இராஜ வசிய மை

 





🌹இராஜ_வசிய_மை🌹


இந்த மை தயாரிப்பது எப்படி என்று

இந்த பதிவில் தெரிந்துகொள்வோம் வாங்க

மஹா சித்தர் ஸ்ரீ அகத்தியர் பெருமானார் தனது மாந்திரீக காவியத்தில் பாடல் வழியாக சொல்லிருக்கார் 

இதை ஓலை சுவடியில் இருந்து எடுத்து இங்கே தெளிவாக பதிவு செய்கிறேன் நீங்களும் இந்த மை தயாரித்து பயன்பெற வேண்டுகிறேன். 


இப்போது பாடலை பார்க்கலாம் 


"மெய்யான வசியமது சொல்வேனப்பா 

  வித்தகனே புலஸ்தியனே மச்சகேந்திரா 

பொய்யன வசியமது யென்  றெண்ணாதே 

  பொங்க  முடன் மன்னவர்கள் வசியமப்பா 

துய்ய நல்ல வணங்கிய  ப்பாகா  ரிவணங்கி

  துப்புரவாய் பூனையின் றன் வணங்கியாகும் 

பையவே வெள்ளெருக்கு தொட்டியாகும் 

  பாங்கான பொன்முசு  ட்டைமூலி  யாகும் 

மூளையா மிவைகளேல் லாம்  வசிய மூலி 

   முக்கிய மாய்கிர ணமதில் வேர்பிடுங்கி 

சாலியாய் தீக் கொளுத்தி கரியதாக்கி

    சட்டமுடன் புனுகுடனே ரோசனையுஞ் சேர்த்து

மாலியாய் பூரமுடன் கஸ்தூரி யப்பா 

   மகா தேவா குங்கு மமும்கூட சேர்த்து 

வாலிபனே யாவின் நெய் தன்னிலப்பா 

   வளமுடனே மையாக்கி பதனங் கொள்ளே 

கொள்ளவே மையதனைக் குறிப்பாயப்பா 

  கொற்றவனே பூசைமுகம் கொலுநிறுத்தி 

தெள்ளமிர்த மான தொரு கருவுக் கப்பா 

   தோற்றமுடன் பிரணவத்தை உறுதானேற்றி 

வள்ளலுயர் தெள்ளுமணி யாம்பாள் பாதம் 

   வணக்கமுடன் தியானித்து வுருக் கொண்டேத்தி 

கள்ளமில்லா கனகரிஷி பாதந் தொட்டு 

   காவலனே யிந்த வித்தை யாடுவீரோ. "


இந்த பாடல் உங்களுக்கு புரிகின்றதா நண்பர்களே? 

புரியாதவர்களுக்கு இரத்தின சுருக்கமாக எழுதுகிறேன் 


1.அணை வணங்கி எனும் தேள் கொடுக்கும்.

2.வட்ட திருப்பி

3.வெள்ளெருக்கு 

4.குப்பை மேனி 


ஆகிய மூலிகைகளுக்கு கிரகண நேரத்தில் காப்பு கட்டி முறை படி 

சாப நிவர்த்தி, பிராண பிரதிஷ்டை மந்திரங்கள் சொல்லி எலுமிச்சை வெட்டி பலி கொடுத்து 

முந்தைய பதிவில் சொன்ன படி 

மூலிகைகளை எடுத்து 

இழலில் உலர்த்தி 

வாரத்தில் வரும் திங்கள் கிழமை அன்று கற்பூரம் அடுக்கி அதான் மேல் சொன்ன மூலிகை வேர்களை சம அளவில் வைத்து கொளுத்தி கரியாக்கி எடுத்து கல்வத்தில் போட்டு 

அதனுடன் புனுகு, கோரோசனை, பச்சை கற்பூரம், கஸ்தூரி, குங்கும பூ தலா 1கிராம் அளவில் சேர்த்து 

பசு நெய்விட்டு மை பாதத்தில் அரைத்து எடுத்து 

செப்பு, அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து 


வெற்றிலை பாக்கு, பழம் தேங்காய், அவுல் பொரி கடலை,  ஊது பத்தி, 

சூடம், தீபம் போட்டு 

கிழக்கு திசை நோக்கி அமர்ந்து "ஓம் நமசிவய" என்ற மந்திரத்தை 1லட்சம் உரு போட்டு, 

நெற்றியில் இட்டுக்கொண்டால் 

நமக்கு மேல் நிலை பணியாற்றும் அதிகாரிகள் நமக்கு வசியமாகி பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம், 

அரசியல் பதவிகள், 

அமைச்சர்கள் வசியமாவார்கள் 

நமக்கு மதிப்பும் மரியாதைக்கும் தருவார்கள் 

பொதுவக எந்த துறையாக இருந்தாலும் 

நமக்கு மேல் நிலை அதிகாரிகள் நமக்கு வசியமாவார்கள் அவைகளை வைத்து நமக்கு தேவையான காரியங்களை சாதித்துக்கொள்ள முடியும்

முயற்சி செய்து பாருங்கள்

நன்றி.

Comments

Popular posts from this blog

கணவன் மனைவி வசியம்

காதலர் ஒன்று சேர