கணவன் மனைவி வசியம்

கணவன் மனைவி வசிய மந்திர பிரயோக முறை..... கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு நீங்கவும், பிரிந்து சென்ற கணவன் அல்லது மனைவி மீண்டும் மனம்மாறி திரும்ப தேடி வர இம்முறையை பிரயோகம் செய்யுங்கள். அம்மாவாசை நாளில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் மண் விளக்கில் கிழக்கு முகமாக நெய் தீபம் ஏற்றி வடக்கு முகமாக நீங்கள் பச்சை வர்ண துணி விரித்து அதன் மீது அமர்ந்து தூப தீபம் காட்டி ஒரே மனதாக சம்பந்தப்பட்ட நபரின் முகத்தை மனதில் நிறுத்தி மந்திரம் 1008 உரு கொடுக்கவும். இவ்வாறு 48 தினங்களுக்கு விரதமிருந்து பூஜை செய்யவும் பிறகு மாற்றத்தை கண்கூடாக காணலாம். மந்திரம் :- ஓம் நமோ வாஸுதேவாய நம (இன்னார்) வசிய வசிய குருகுரு சுவாகா. [இன்னார் என்ற இடத்தில் சம்மந்தப்பட்ட நபரின் பெயரை சேர்த்து உச்சரிக்க வேண்டும்]